சம்பா சாகுபடி விவசாயிகள் நவ.15-க்குள் பயிர்க் காப்பீடு செய்யலாம் :

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாளாகும்.

நாகை மாவட்டத்தில் இதுவரை 51,266 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. இதில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இதுவரை 20,821 ஹெக்டேர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பயிர்க் காப்பீடு செய்யாத வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள், அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக ஒரு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ.500.88 செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்ய நவ.15-ம் தேதி கடைசி நாளாகும்.

விவசாயிகள் இறுதி நேரம் வரை காத்திருந்து ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதமரின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் காப்பீடுத் தொகையை செலுத்தி முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்