நாகர்கோவில்: நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கோணம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மா.அரவிந்த் குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
ரூ.2.68 கோடி மதிப்பில் இக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தரைத்தளம் 531.30 சதுர மீட்டர், முதல் தளம் 525.45 சதுர மீீட்டர், இரண்டாவது தளம் 430.50 சதுர மீட்டர், 3-வது தளம் 20 சதுர மீட்டர் என, மொத்தம் 1507.25 சதுர மீட்டர் அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் 12 வகுப்பறைகள், ஒரு ஆய்வகம், மாணவ, மாணவியருக்கான கழிப்பிட வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், சாய்வுதள வசதி உள்ளது. திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், கல்லூரி முதல்வர் பனிதாசன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago