நாகர்கோவில்: இலங்கை கடற்படை கப்பல் மோதி கோட்டைப்பட்டினம் மீன்பிடி படகு மூழ்கி, மீனவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய சந்திப்பில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட மீன் தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். சங்க கூட்டமைப்பு தலைவர் ஜெலஸ்டின், மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத் தலைவர் அலெக்ஸாண்டர், மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago