திருவண்ணாமலை வணிக வரித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.20 ஆயிரம் மற்றும் 35 பட்டாசு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தி.மலை ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த வணிக வரித் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தீபாவளி வசூலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து ரொக்கப் பணம், பட்டாசுகள் மற்றும் பரிசுப் பொருட்களை கடந்த ஒரு வாரமாக வசூலித்து வந்துள்ளனர்.
இதையறிந்த, திருவண்ணா மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலகத்தில் நேற்று மாலை அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். துணை ஆணையர், உதவி ஆணையர் அறைகள் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப் பட்டது. பீரோக்கள் மற்றும் மேஜை பெட்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அலுவலர்கள் பயன்படுத்திய சாப்பாடு பாத்திரங்களும் தப்ப வில்லை. மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.20 ஆயிரம், 35 பட்டாசு பெட்டிகள், ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் சிக்கின.
இவற்றை பறிமுதல் செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தீபாவளி வசூலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago