பாலாற்று வெள்ளத்தில் தரைப் பாலங்கள் மூழ்கின :

By செய்திப்பிரிவு

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளதால், பொது மக்களுக்கு தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆழியாறு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அர்த்தநாரிப்பாளையம் வனப் பகுதியில் பெய்த கனமழையால் மாடேத்தி பள்ளம், ஆலாங்கண்டி பள்ளங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து பாலாற்றில் கலந்து வருகிறது. இதனால் பாலாற்றின் குறுக்கே உள்ள கெங்கம்பாளையம் தரைப்பாலம், கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர் தரைப்பாலங் களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.

கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், தரைப்பாலம் வழியாக செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி பெத்தநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகத்தினர் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, பெத்தநாயக்கனூர் ஊராட்சி தலைவர் ஜெகநாதன் கூறும்போது, ‘‘பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்குட் பட்ட கெங்கம்பாளையம் தரைப்பாலம் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாலத்தை கவனமாக கடந்து செல்லவேண்டும். ஆற்றில் இறங்கி குளித்தல் மற்றும் துணிகளை துவைத்தல், கால்நடைகளை ஆற்றில் குளிக்க வைத்தல் கூடாது. குழந்தைகள் ஆற்று பகுதிக்கு செல்ல பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்