ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க, ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை உள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி விட்டதால், மறைமுகமாக பயணிகள் ரயில் மூலம் பட்டாசுகளை எடுத்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து, கோவையில் ரயில்வே காவல்துறையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் உள்ள ஸ்கேனிங் இயந்திரத்தில் பயணிகளின் உடமைகள் ஸ்கேன் செய்யப்படுகின்றன. அதேபோல, ரயில் பெட்டிகளின் உட்புறப் பகுதிகளிலும், ரயில் நிலைய வளாகத்திலும் பயணிகளின் உடமைகளை ‘மெட்டல் டிடெக்டர்’ கருவியைக் கொண்டும், மோப்ப நாயைக் கொண்டும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுடன் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களும் இணைந்து சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள்இருந்தால், அவர்களை காவல் நிலையத் துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய பின்னரே அனுப்புகின்றனர். மேலும், ரயிலில் பட்டாசுகள் கொண்டு வரக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago