காணாமல் போன யானை தந்தங்கள் மீட்பு :

By செய்திப்பிரிவு

கோவை அருகே வனப்பகுதிக்குள் உயிரிழந்து கிடந்த காட்டு யானையின், காணாமல் போன இரு தந்தங்கள் மீட்கப்பட்டன.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளப்பதி பிரிவு கரியன் படுகை சரகப் பகுதியில் கடந்த 23-ம் தேதி ஆண் யானை உயிரிழந்து கிடந்தது. யானையின் இரு தந்தங்களும் காணாமல் போயிருந்தன. இதனால், வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, 5 தனி குழுக்கள் அமைத்து தீவிர தேடுதல் பணி நடைபெற்றது.

இந்நிலையில், யானையின் எலும்புகள் கண்டறியப்பட்ட இடத்திலிருந்து 430 மீட்டர் தொலைவில் முட்புதர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு தந்தங்களையும் வனத்துறையினர் நேற்று கைப்பற்றினர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

வனத்துறையினர் கூறும் போது, “யானை தந்தத்துக்காக கொலை செய்யப்படவில்லை என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் தந்தங்களை எடுத்து மறைத்து வைத்தவர்களைத் தேடி வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்