தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் - சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர்க்கடன் பெறலாம்.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 5 மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் (லேம்ப்), 2 நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட மொத்தம் 210 கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தகுதியின் அடிப்படையில் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜாமீன் அடிப்படையில் பயிர்க்கடன் ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும், அடமானத்தின் அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும், விவசாயிகளின் நிலம், அவர்கள் பயிர் செய்யும் நிலப்பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் பயிர்க்கடனுக்கு வட்டி வசூலிக்கப்படாமல் வட்டியில்லா பயிர்க்கடனாக வழங்கப்பட்டு வருகின்றது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் தங்களது எல்லையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தகுதியின் அடிப்படையில் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்