தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆங்காங்கே பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரத்தில் கடந்த 26-ம் தேதி பட்டாசு கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளை சோதனை செய்ய உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை நடைபெறும் இடங்களுக்கு சென்று உரிய அனுமதி பெற்று விதிமுறைகளை கடைபிடித்து கடை வைத்துள்ளனரா தடைசெய்யப்பட்ட வேதிபொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனரா, கடை வைத்திருக்கும் இடங்களில் உயர் மின் அழுத்த கம்பிகள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும் விதம்,கடைகளுக்கு அருகே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனரா என்ற சோதனையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கோவிலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையில் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீஸார், தேவபாண்டலம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வரும் கந்தசாமி (62) என்பவர் வீட்டில் சோதனை செய்த போது அனுமதியின்றி சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது கண்டறி யப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்து அவர் வைத்திருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பட்டாசுகள் பறிமுதல் செய்து அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago