சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றில் மணல் திட்டு கள் அதிக அளவில் உள்ளதால் வெள்ள காலத்தில் பல கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு அணைக் கட்டு பகுதியில் வெள்ளாற்றின் மேல்பகுதியில் அதிக அளவில் மணல்திட்டுகள் உருவாகி உள்ளன. தற்போது இந்த மணல் திட்டில் கருவேல மரங்கள், முட்புதர்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து, செடிகள் மண்டியுள்ளன.
மழை, வெள்ள காலங்களில் வெள்ளாற்றில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக ஒவ்வொரு ஆண்டும் விநாடிக்கு சுமார் ஒரு லட்சம் கன அடி முதல் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் செல்லும். அப்போது சேத்தியாத்தோப்பு மற்றும் புவனகிரி பகுதியில் உள்ள 30- க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் விளைநிலங்களை வெள்ளநீர் சூழ்ந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் சேத்தி யாத்தோப்பு அணைக்கட்டில் மேற்கு பகுதியில் உள்ள மணல்திட்டின் வழியாக வரும் மழை வெள்ள நீர் ஆற்றில் செல்வதற்கு தடை ஏற்படும்.
இதனால் வெள்ள நீர் அதிக அளவில் தேங்கி மேல்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை காலம் தொடங்கும் முன்பு இந்த மணல் திட்டுகளை அகற்ற வேண்டும், வெள்ளாற்றின் கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago