புதுச்சேரியில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 3,614 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 34, காரைக்காலில் 7, மாஹேவில் 4 என மொத்தம் 45 பேருக்கு (1.25 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 90 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 363 பேரும் என 453 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் உயிரிழப்பு இல்லை. இறப்பு எண்ணிக்கை 1,857 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 35 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்