புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் பி.ஆர்க் படிப்புக்கு இன்று இறுதி கலந்தாய்வு நடக்கிறது.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் பி.ஆர்க் படிப்பில் 20 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் சென்டாக் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, தேசிய அளவில் நடத்தப்படும் நட்டா நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும். இப்படிப்பில் சேர 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். நட்டா மதிப்பெண் அடிப்படையில் 28 பேர் கொண்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று (அக். 29) நடைபெறும் என்று சென்டாக் அறிவித்துள்ளது. இதில் பொது-2, ஓபிசி-1, எம்பிசி-3, எஸ்சி-4, முஸ்லிம்-1 என 10 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் இன்று காலை 9.45 மணிக்குள் சென்டாக் அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பி.டெக் லேட்ரல் என்ட்ரி இறுதி தரவரிசை வெளியீடு
புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கான குறிப்பிட்ட சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவர்கள் பி.டெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம். இவர்களுக்கான லேட்ரல் என்டரி சேர்க்கை விண்ணப்பப் படிவங்கள் ஆன்லைனில் கடந்த மாதம் 26-ம் தேதி வரை பெறப்பட்டது. இறுதி தரவரிசை பட்டில் சென்டாக் இணையத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாப்அப் கவுன்சலிங்கில் காலியிடங்கள் இருந்தால் பிற மாநில மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago