விழுப்புரம் அரசு கல்லூரிகளில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ரூ.1.90 கோடியில் கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஒரு ஆய்வக கட்டிடம், விழுப்புரம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.2.97 கோடியில் கட்டப்பட்ட 12 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதன்படி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கல்லூரி முதல்வர்கள் சிவக்குமார், கணேசன், திமுக மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago