விழுப்புரம் நகராட்சி - பட்டாசு விற்பனை கடைகளில் ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் கடந்த 26-ம் தேதி பட்டாசுக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து

விழுப்புரம் நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கபட்டுள்ள பட்டாசு விற்பனை கடைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ளதா என ஆட்சியர் மோகன் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைப்பதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார்களா. கடைகளில் உரிய தீயணைப்பு கருவிகள் மற்றும் மணல் நிரப்பிய வாளிகள் வைக்கப்பட்டுள்ளதா.

கடைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளதா.

காற்றோட்டமான சூழலில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆட்சியர் ஆய்வு மேற் கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்