சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப் படவில்லை என விவசயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் 520 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 95 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயி கள் நெற்பயிரை காப்பீடு செய்தனர். கடந்த ஆண்டு வெள்ளத்தால் நெற்பயிர்கள் அறுவடை செய் யப்படாமல் நிலத்திலேயே அழுகின. 300-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் 77 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 69,912 விவசாயிகளுக்கு ரூ.18.38 கோடி இழப்பீடு அறி விக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை வட்டத்தில் விரி சூர் வருவாய் கிராமத்துக்கு 0.08 சதவீதம், காளையார்கோவில் வட்டத்தில் செம்பனூர் வருவாய் கிராமத்துக்கு 1.62 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மாரந்தை ஊராட் சித் தலைவர் திருவாசகம் கூறுகை யில், காளையார்கோவில் வட்டத்தில் மாரந்தை, சாக்கூர், வலனை, காஞ்சிரம், காகுளம், வேலாரேந்தல், கோலாந்தி, மறவ மங்கலம் என பல வருவாய் கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், அந்த கிராமங்களுக்கு இழப்பீடு அறிவிக்கவில்லை. காளை யார்கோவிலில் 63 வருவாய் கிராமங்களில் 6-க்கு மட்டும் இழப் பீடு அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் வெங்கடேசன் கூறியதாவது:
சிவகங்கை மாவட் டத்தில் மகசூல் மதிப்பீடு குறைந்துவிட்டதன் காரணமாக இந்த ஆண்டு இழப்பீடு தொகை குறைந்துள்ளது. அடுத்த ஆண்டு பாதிப்பு இருந்தால் இழப்பீடு அதிகரிக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவியை பெற்றுத் தந்துள்ளோம் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago