- யாகசாலை பூஜைகளுடன் - பசும்பொன்னில் தேவர் குருபூஜை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது.

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை அக்.28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அக்.28 அன்று ஆன்மிக விழாவாகவும், அக்.29-ல் அரசியல் விழாவாகவும், அக்.30-ல் அரசு விழாவாகவும் நடத்தப்படுகிறது.

முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை, ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. முதல் நாள் விழாவான ஆன்மிக விழா நேற்று காலை 8 மணிக்கு தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் காந்திமீனாள் நடராஜன், தங்க வேலு, பழனி, அழகுராஜா உள்ளிட் டோரின் முன்னிலையில் பிள்ளை யார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் லட்சார்ச்சனை பெருவிழா, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி, அபிஷேகம், ஆராதனை நடைபெற்று விழா தொடங்கியது.

இதைத் தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையடுத்து மாலை திருவிளக்கு பூஜை, தேவர் ஆலயத்தில் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற் றன.

கமுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராள மானோர் பால்குடம் எடுத்தும், ஜோதி ஏந்தியும், அலகு குத்தியும் முத்துராமலிங்கத் தேவருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்