ஈரோடு: ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், தீபாவளி இனிப்பு, கார வகைகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோருக்கான விழிப்புணர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவிக்னேஷ் பேசியதாவது:
தீபாவளி இனிப்பு, கார வகைகள் செய்ய புதிதாக தயாரிக்கப்பட்ட எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடை, கிடங்கு, திருமண மண்டபங்களில் பண்டங்கள் தயாரித்தாலும், விற்பனை செய்தாலும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் அல்லது அனுமதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். கலர் பொடிகளை பயன்படுத்தக்கூடாது.
தடை செய்யப்பட்ட, ஆபத்தான, கெட்டுப்போன பொருட்களை பண்டங்கள் தயாரிக்க அல்லது விற்பனை செய்யும் இடங்களில் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உற்பத்தி, விற்பனை செய்யும் இடங்களில் பணிபுரிவோர் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், என்றார். கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தங்கவேல், செயலாளர் முருகானந்தம் உட்பட பல்வேறு பகுதியைச் சேர்ந்த உணவுப் பொருள், இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago