கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள வெளிமாநில விவசாயிகளுக்கு ஆதாரைப் பெற்றுக்கொண்டு, எக்காரணத்தை கொண்டும் உரங்கள் வழங்கக் கூடாது என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராபி பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 2422 மெ.டன், டிஏபி 1768 மெ.டன், பொட்டாஷ் 1002 மெ.டன், காம்பளக்ஸ் 4810 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கேட்கும் உரத்தை இணைப்பு பொருட்களுடன் வற்புறுத்தி அளிக்காமல் விற்பனை மேற்கொள்ள வேண்டும்.
உரங்களை இருப்பு வைத்துக் கொண்டு செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்படுத்தக் கூடாது. அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் பரப்பிற்கு ஏற்ற உரப்பரிந்துரையின் படியே விற்பனை மேற்கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமாக உரமிடுதலை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். மேலும் விவசாயிகள் வாங்கும் உர அளவிற்கு அதிகமாக, அவர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் அண்டைய மாநில விவசாயிகளுக்கு ஆதார் பெற்றுக்கொண்டு, எக்காரணத்தை கொண்டும் உரங்கள் வழங்கக்கூடாது.
நம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உரங்களை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விற்பனை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உரக்கட்டுபாட்டு ஆணை 1985-ன் படியும், அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ம் படியும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறுபவர்களின் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago