கைத்தறி சேலைகள் கண்காட்சி ஈரோடு பூம்புகாரில் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு பூம்புகாரில் கைத்தறிச் சேலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் ஈரோடு - மேட்டூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. தீபாவளிப் பண்டிகையையொட்டி, இந்த விற்பனை நிலையத்தில் கைத்தறி சேலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. கண்காட்சியில், சேலை பார்டரில் மயில், பொம்மை, புத்தர், ராதாகிருஷ்ணன் போன்ற பலவகையான டிசைன்களுடன் கூடிய மதுரை சுங்குடி சேலைகள், மதுரை மற்றும் செட்டிநாடு காட்டன் சேலைகள், பாலி காட்டன் சேலைகள் உள்ளிட்ட பலவகையான சேலைகள் இடம் பெற்றுள்ளன. நவம்பர் 5-ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சேலைகள் ரூ.480 முதல் ரூ.2500 வரை விற்கப்படுகின்றன.

கண்காட்சியையொட்டி 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கிரடிட் கார்டுகள் சேவைக்கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் என பூம்புகார் நிறுவன மேலாளர் ஜி. சரவணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்