இரணியலை அடுத்த கண்டன்விளையைச் சேர்ந்வர் நேசமணி(75). இவருக்கும், சகோதரர் அன்பையன் என்பவருக் கும் இடையே பணப்பிரச்சினை இருந்து வந்தது.
நேற்று முன்தினர் இரவு வீட்டு முன்பு நின்றுகொண்டிருந்த நேசமணியிடம் அன்பையன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது தாக்கப்பட்டதில் நேசமணி பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதுகுறித்து அவரது மகன் ராஜா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளி்ததார்.
நேசமணியை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அன்பையனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago