நாகர்கோவில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வித்துறையில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற 7 பேருக்கு இதுவரைபணபலன்களை வழங்கவில்லை. வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்இதுவரை அதை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி நாகர்கோவில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பூதப்பாண்டி பட்டர்குளம் காலனியை சேர்ந்த பாப்பா உட்பட 7 பேர் தங்களது குடும்பத்துடன் கோரிக்கை மனுக்களை ஏந்தியவாறு உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுடன் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ., மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதை அவர்கள் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago