வெள்ளிச்சந்தை அருகே ராமநாதபுரத்தில் குருந்தன்கோடு வட்டார வேளாண்துறை சார்பில் மண்வள அட்டை திட்டம், பயிர் காப்பீடு திட்ட சிறப்பு பயிற்சி முகாம் இரு நாட்கள் நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் விமலா தலைமை வகித்தார். வெள்ளிச்சந்தை ஊராட்சித் தலைவர் தாமஸ் கென்னடி முகாமை தொடங்கி வைத்து செயல்விளக்க திடல் கிராம பயிற்சி கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் இயக்க பேராசிரியர் லதா, வேளாண் விஞ்ஞானி ராஜ்குமார் மற்றும் பலர் வேளாண் திட்டங்கள் மற்றும் மண்வளம் குறித்து பேசினர்.
இதில் வேளாண் பிரதிநிதிகள் தேவதாஸ், அந்தோணி ஜார்ஜ் ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரத்தில் நடந்த பயிர் காப்பீட்டு திட்ட சிறப்பு பயிற்சி முகாமில் விவசாயிகளுக்கு செயல்விளக்க திடல் கையேடு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago