தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீத போனஸ் :

By செய்திப்பிரிவு

தீபாவளியை முன்னிட்டு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீத போனஸ் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கஆலோசனைக் கூட்டம், நேஷனல்சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கோபால்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கதலைவர் சுரேஷ், துணைத்தலைவர் ராஜூ, சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர், கழுகுமலை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். டிச.1-ம் தேதி முதல் 50 குச்சிகள்கொண்ட தீப்பெட்டி ரூ.2-க்கு விற்பனை செய்வது என முடிவெடுக்கப்பட்டது. தீபாவளிக்கு பின்னர்தொழிலாளர்களுக்கு கூலியைஉயர்த்தி கொடுப்பது, தீப்பெட்டிதொழிலாளர்களுக்கு தீபாவளிபோனஸாக ஆண்களுக்கு 15 சதவீதமும், பெண்களுக்கு12 சதவீதமும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

`தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு குளோரேட், சல்பர் ஆகியவற்றை கொண்டு செல்ல, மாவட்ட ஆட்சியர் மூலம் வாங்கும் தடையில்லாச் சான்றிதழை நீக்க வேண்டும். தீப்பெட்டி ஆலைகளில் நிகழும் சிறிய விபத்துகளுக்கு உரிமையாளரை கைது செய்வதை தவிர்க்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்