ஊழல் கண்காணிப்பு வாரத்தை யொட்டி கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி ஜி.ஹெக்டர் தர்மராஜ் தலைமை வகித்து பேசும்போது, ``லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு. அரசு ஊழியர்கள் தங்களது பணிகளை சட்டப்படி செய்வதற்கு கையூட்டு வழங்கினால் அது லஞ்சமாகும். இளைஞர்கள் லஞ்சத்தை தடுக்க முன் வர வேண்டும். லஞ்சம் தொடர்பாக அறிந்தால், உடனடியாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்” என்றார்.
பின்னர், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி மாணவ, மாணவிகள் லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கைகளை கோத்து லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என கோஷங்கள் முழங்கியவாறு மனித சங்கிலி அமைத்தனர்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சி.ஜெய தலைமையில் அனைவரும் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் எம்.சுதா, இன்னர்வீல் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஜெய மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago