பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் நகரச் செயலாளர் ஏ.சரோஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன் பேசினார். இதில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமைத்து, நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் ஜி.பாபு, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.பரமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago