தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாநகரில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
கயத்தாறு 63, கோவில்பட்டி 18, மணியாச்சி 15, விளாத்திகுளம் மற்றும் கழுகுமலையில் தலா 13, திருச்செந்தூர், வைகுண்டம் மற்றும் எட்டயபுரத்தில் தலா 8, சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடியில் தலா 5, வைப்பார் மற்றும் சூரன்குடியில் தலா 3, ஓட்டப்பிடாரம் மற்றும் கீழ அரசடியில் தலா 2, குலசேகரன்பட்டினத்தில் 1 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பாசிப் பயறு, உளுந்து மக்காசோளம் போன்ற பயிர்களை விதைப்பு செய்துள்ளனர்.
இந்நேரத்தில் பெய்துள்ள மழை விவசாயிகளை மகிழ்ச்சி யடையச் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago