மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம், சாராயம் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் அபாயகரமான பின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசும் போது, "ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கலைக்குழுக்கள், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட காவல் துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை (போதை மற்றும் மறுவாழ்வு) ஆகிய துறைகள் மூலம் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச் சந்திரன், துணை ஆட்சியர் (கலால்) சத்தியபிரசாத், பிற்படுத்தப்பட்டோர் நலன் துணை ஆட்சியர் சதீஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர், கலால் வட்டாட்சியர் நடராஜன், வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்