கோவையில், ரயிலில் கடத்தப் பட்ட 23.5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் தில் இருந்து, கோவை வழியாககேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது.
இந்த ரயிலில் பயணிகள் போர்வையில் சிலர் கஞ்சா கடத்திவருவதாக ரயில்வே போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே போலீஸார், ரயிலில் சோதனை நடத்தினர். அதில், எஸ்.4 முன்பதிவு பெட்டியில் உள்ள ஒரு இருக்கைக்கு அடியில் சிறிய சாக்குமூட்டை கிடந்தது.
அதற்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதை யடுத்து போலீஸார், அந்த மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அதில் 7 கிலோ கஞ்சா,பொட்டலங்களாக பிரித்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மேலும், அதே பெட்டியில் மற் றொரு பகுதியில் இருக்கைக்கு அடியில் இருந்த இன்னொரு மூட்டை கண்டு பிடிக்கப்பட்டது. அதை சோதனை செய்த போது, அந்த மூட்டையில் மேலும் 16.5 கிலோ கஞ்சா, பொட்டலங்களாக பிரித்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரயில்வே போலீஸார், இரண்டு மூட்டை களிலும் இருந்த இருபத்தி மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா கடத்திய மர்மநபர்கள் குறித்து ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago