கயிறு பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் : கயிறு வாரியத் தலைவர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

கயிறு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத் தில் உள்ளது என கயிறு வாரிய தலைவர் டி.குப்புராமு தெரிவித்துள்ளார்.

தேசிய கயிறு வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பொள்ளாச்சி கயிறு தொழில் முனைவோர் பங்கேற்ற ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கயிறு வாரியத் தலைவர் டி.குப்புராமு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டில்3780 கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும், உள்நாட்டு வர்த்தகம் ரூ.12000 கோடிக்கும் நடைபெற்றுள்ளது. 2025-ல் தென்னைநார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி 10000 கோடிக்கும், உள்நாட்டு வர்த்தகம் 25000 கோடிக்கும் மேற்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிதாக 2 லட்சம் பேருக்குவேலைவாய்ப்பு உருவாகும்.

கயிறு பொருட்கள் இயற்கை சார்ந்த பொருட்கள் என்பதால் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலாக இல்லாமல் மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவின் தொழில்துறை கொள்கை என்பது கிராமப்புறத்திலிருந்து உலகம் முழுவதும் உற்பத்தி பொருட்கள் செல்ல வேண்டும் என்பதாகும். கயிறில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்க ளாக மாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து தொழில் முனைவோர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜியோ டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் கயிறு பொருட்களை சாலைஅமைப்பதில் எப்படி பயன்படுத்து வது என்பது குறித்து கொள்கை அளவில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அகில இந்திய அளவில் சாலை அமைப்பதில் 7 சதவீதம் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (கயிறு பொருட்களை) பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இந்திய அளவில் கயிறு பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கயிறு வாரியம் இந்தியாவை 6 மண்டலங்களாக பிரித்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கயிறு வாரிய மண்டல செயலாளர் பூபாலன், கயிறு வாரிய உறுப்பினர் கெளதமன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தென்னைநார் மற்றும் நார் பொருட்கள் உற்பத்தி யாளர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்