தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் - கடன் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும் : மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் எளிய நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும் என கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சகத்தின் நிதியாதார பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட அளவிலான வங்கிகள்குழு மற்றும் அனைத்து வங்கிகளின்சார்பில் ‘மாபெரும் வங்கிகள் சங்கமம் (கண்காட்சி)' கோவையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி முன்னின்று நடத்திய இந்நிகழ்வில் பாரதஸ்டேட் வங்கி உட்பட 20-க்கும் மேற்பட்ட வங்கிகள் பங்கேற்றன.

முன்னதாக, நிகழ்வை கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார். கனரா வங்கியின் சென்னை வட்டார அலுவலக முதன்மைப் பொது மேலாளர் பி.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிகழ்வில் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசியதா வது: கோவை மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் எளிய நடை முறைகளைப் பின்பற்றி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும். பொதுமக்களில் பலர் கடன் பெறுவதற்காக அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிய பிறகும் கூட, சட்ட ஆலோசனைக்கு பிறகு அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

ஏற்கனவே பணம் இல்லாத காரணத்தினால் தான் வங்கிகளில் கடன் கேட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கை களைப் புரிந்து கொண்டு நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, எளிய முறையில் மக்களுக்கு கடன் வழங்கவங்கிகள் முன்வர வேண்டும். வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றுக்கு அளிக்கும் அக்கறையை சிறு, குறு தொழில்களுக்கும், மாணவர்களின் கல்விக் கடனுக்கும் வங்கிகள் செலுத்த வேண்டும்.

தற்போதைய கரோனா நெருக்கடி போன்றவற்றால் பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்து உள்ளது. இத்தகைய சூழலில் கல்விக்கடன் வழங்குவதில் வங்கிகள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதலான கல்விக் கடன்வழங்குவதற்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கண்காட்சியில், வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், விவசாயக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன், முத்ரா கடன், தனிநபர் கடன் உட்பட பல்வேறு கடன்களை பொதுமக்கள் சுலபமாக பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், காலை 9மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெற்ற கண்காட்சியில் 11,032பேருக்கு ரூ.430 கோடி வரை பல்வேறு வகை கடன் வழங்கப்பட்ட தாக மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்