அம்மா உணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

ஊதியத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிடக் கோரி சென்னையில் நேற்று அம்மாஉணவக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.9,000 சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஊழியர்களின் பணி நாட்கள் மற்றும் சம்பளத்தை பாதியாகக் குறைத்து, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அம்மா உணவக ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார்அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர், அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், தலைமைச் செயலகத்துக்கு சென்ற ஊழியர்கள், முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் சிலர் கூறும்போது, "நாங்கள் கடந்த 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். திடீரென ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் பணிபுரிய வேண்டும். சம்பளம் ரூ.4,500-தான் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திடீரென்று சம்பளத்தை பாதியாக குறைத்தால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, முழு சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்