சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அஞ்சல் அதிகாரி எம்.முரளி கூறியதாவது: அஞ்சலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் கங்கை நீரை விற்பனை செய்வதற்காக சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 250 மி.லிட்டர் கங்கை நீர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கங்கோத்ரி நதியில் இருந்து எடுக்கப்படும் இந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 96 அஞ்சலகங்களிலும், தமிழகம் முழுவதும் 395 அஞ்சலகங்களிலும் கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது. கோயில்களில் பூஜைகளுக்கும் இந்த நீரைப் பயன்படுத்தலாம். எனவே, கோயில் நிர்வாகங்கள் மொத்தமாக வாங்கிப் பயன்படுத்தலாம். இதைதவிர, வீடு, கடை, தொழில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை உள்ளிட்ட புனித காரியங்களுக்கு கங்கை நீரைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago