காரைக்குடி போக்குவரத்துக் கழக மேலாளர் மீது தாக்குதல் : தனியார் பேருந்து ஊழியர்கள் 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் அரசு பேருந்து புறப்படும் நேரத்தில் தனியார் பேருந்தை இயக்குவதைக் கண்டித்த போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளரைத் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி புது பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து புறப்படும் நேரத்தில், தனி யார் பேருந்து இயக்கப்படுவதாக கூறி அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு தனி யார் பேருந்து ஊழியர்களை போக்கு வரத்துக் கழகக் கிளை மேலாளர் சண்முகசுந்தரம்(38) கண்டித்தார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கிளை மேலாளர் சண்முகசுந்தரத்தை தனியார் பேருந்து ஊழியர்கள் கண்ணன் (46), ராஜாஜி (37), முத்து, கருப்பசாமி (27) ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீ ஸார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்