உத்தர பிரதேச மாநிலத்தில் கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் 4 பேர் உட்பட 5 பேரின் அஸ்திக்கு திருச்சியில் நேற்று விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் 4 பேர், பத்திரிகையாளர் ஒருவர் என 5 பேரின் அஸ்தியை ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் கொண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகேயுள்ள கமான் வளைவு பகுதிக்கு நேற்று வந்த அஸ்திக்கு விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சிவசூரியன், முகம்மதலி, இந்திரஜித், சிதம்பரம், பாண்டியன், செழியன், ரவிக்குமார், சம்சுதீன், ஜோசப், ஜெயசீலன், திராவிடமணி, ரங்கராஜன், சிவா, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின், தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்ற அஸ்தி கலைய அஞ்சலி நிகழ்ச்சிக்கு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பா.பாலசுந்தரம், வீர.மோகன் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு தலைவரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோ.நீலமேகம், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலாளர், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், தொழிற்சங்க நிர்வாகிகள் சி.சந்திரகுமார் ஆர்.தில்லைவனம், வெ.சேவையா, துரை.மதிவாணன், சி.ஜெயபால், கே.அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago