மணப்பாறை அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் இருந்து அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக வளநாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது, மணப்பாறை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகருக்குச் சொந்தமான நிலத்தை சமப்படுத்துவதற்காக, அங்கிருந்து பொக்லைன் உதவியுடன் லாரிகளில் மண் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த டிப்பர் லாரி ஓட்டுநர்களான பாலக்குறிச்சி அருகேயுள்ள ரங்கம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (35), தாதமலைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (50), ஆரியகோன்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (21), பொக்லைன் ஆபரேட்டரான ஆரியம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 3 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மண் கடத்தலில் தொடர்புடையதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர், ஆரி யம்பட்டி செல்வராஜ்,
ஆரிய கோன்பட்டி ஆறுமுகம், காவல் காரன்பட்டி சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago