‘நீட்’-க்கு விலக்கு கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசு மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக முழுமையாக நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் ஏ.கே.திராவிடமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

பெருமன்ற மாவட்டத் தலைவர் ஆர்.முருகேசன், மாவட்டச் செயலாளர் கே.இப்ராகிம், வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ராமராஜ், பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினர் டி.மார்க்சிம் கார்கி, டி.விஸ்வநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற ஆப்பாட்டத்தில் அமைப்பின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பலர் கலந்துகொண்டனர்.

திருவாரூரில் மாவட்டச் செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.சரவணன், எம்.நல்லசுகம், மாணவர் மன்ற மாவட்ட தலைவர் ஜெ.பி.வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்