இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: திருச்சியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இலங்கை அகதிகளான ரகுநேஷ்(24), ஹரிஷ்ராம்(22), ராகவ்(25) ஆகியோர் திருச்சி கே.கே.நகர் பகுதியில் தங்கி இருந்து, இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கடந்த 2017-ல் கியூ பிரிவு போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, இவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அப்போது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்த வழக்கு புதுக்கோட்டை போதைப்பொருள் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரகுநேஷ், ஹரிஷ்ராம் மற்றும் ராகவ் ஆகியோருக்கு ஒரு பிரிவில் தலா 4 ஆண்டுகளும், மற்றொரு பிரிவில் தலா 3 ஆண்டுகள், மற்றொரு பிரிவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். மேலும், தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்