ஜெயங்கொண்டத்தில் மாற்றுத் திறனாளிகள்10 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கல் :

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்து, பயனாளிகள் 10 பேருக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் 88 பேருக்கு அடையாள அட்டை, 3 பேருக்கு மடக்கு குச்சி வழங்கினார். முகாமில் 210 மாற்றுத் திறனாளிகளிடமிருந்து ஸ்மார்ட் கார்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்