தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் திருநெல் வேலி ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அவர்கள், ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். அதில், ‘அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பின்றி சிரமப்படுகி ன்றனர். எனவே, ஏற்கெனவே உள்ள அரசாணைப்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளின் நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். வேலை செய்ய தயாராக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago