வேலூர் பில்டர்பெட் சாலையில் மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முகக்கவசம் அணியாமல் இருக்கும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு கிடங்குக்கு லாரியில் இருந்து சரக்கு பார்சலை இறக்கிக் கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த பார்சல் சர்வீஸ் லாரியை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில், 1 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து வந்த பிளாஸ்டிக் பார்சலில் சித்தூர் முகவரி இருந்தது. இதையடுத்து, பிளாஸ்டிக் பார்சலை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரி உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago