கோயில் நகைகளை உருக்குவதை நிறுத்த வேண்டும் : இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோயில் நகைகளை உருக்குவதை நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

உடுமலையில் நேற்று இந்துமுன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வராசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாளை (26-ம் தேதி) கோயில் நகைகளை உருக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எங்கள் அமைப்பு கடும்கண்டனத்தை பதிவு செய்துள்ளது. எனினும் அதையும் மீறி நடவடிக்கை எடுத்தால் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அத்துமீறல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசியல் கட்சி ரீதியாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இந்துக்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளார். அவரது நடவடிக்கையை வரவேற்கிறோம். அவர் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் எங்கள் அமைப்பினர் திரளாக கலந்து கொள் வார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் கிஷோர், கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்