நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது, என சங்கத் தலைவர் வாங்கிலி, செயலாளர் அருள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் சேலம் சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க வளாகத்தில் இன்று (25-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் கரோனா முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி போடப்படும்.

மேலும் சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் ஓட்டுநர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

முகாமில் கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி போன்றவைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். மேலும், கண்பரிசோதனை, சர்க்கரைஅளவு, ரத்த அழுத்தம், உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு தேவையானவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

லாரி, ட்ரெய்லர், எல்பிஜி சங்க உறுப்பினர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்