தீபாவளி போனஸை20% ஆக உயர்த்த வேண்டும் : அரசுக்கு மின்வாரிய தொழிற்சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக அரசு அறிவித்துள்ள தீபாவளி போனஸ் தொகையை 20 சதவீதமாக உயர்த்தித் தர வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் தே.கஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொதுத்துறை ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது மின்வாரிய தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை அறிவிக்கப்படாததும், மிகச் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் அவர்கள் மத்தியில் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே மின்வாரிய ஊழியர்கள் 2 ஆண்டுகளாக அகவிலைப்படி பெற முடியாமல் உள்ளனர். தற்போது மத்திய அரசு கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி அறிவித்துள்ளது. மீண்டும் இருதினங்களுக்கு முன்பு ஜுன் மாதம் முதல் முன்தேதியிட்ட மேலும் 3 சதவீதஅகவிலைப்படியை அறிவித்துள்ளது.

ஆனால், தமிழக அரசு 2022 ஜனவரி முதல் மட்டுமே அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்திருப்பதால், ஊழியர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் முன்னேற்றத்துக் கும், மாற்றத்துக்கும் வாக்களித்த மின்வாரிய ஊழியர்கள் ஏற்கெனவே சரண்டர் விடுப்பு சலுகையையும் 2 ஆண்டுகளாக இழந்துள்ளனர். எனவே, 10 சதவீதபோனஸ் என அறிவிக்கப்பட் டுள்ளதை முதல்வர் மறுபரிசீலனை செய்து 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

அதேபோல், மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கு மின்வாரியமே கரு ணைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்