பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளைக் கொட்டிய நபர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சியால் ரூ.22 லட்சம் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில்பொது, தனியார் இடங்களில் குப்பையை தூக்கி எறிபவர்கள் மீதும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களின் மீதும் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணைவிதிகள் 2019-ன்படி அபராதம்விதிக்கப்படும்.
இதன்படி, கடந்த 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.11,53,600 அபராதமும், பொதுஇடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.11,12,400 அபராதமும் என மொத்தம் ரூ.22,66,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் மாநகராட்சியில் பொதுஇடங்களிலும் நீர்வழித்தடங்களிலும் குப்பைகளை வகைபிரித்து வழங்கவும், கட்டுமானகழிவுகளை பொதுஇடங்களில் கொட்டுவதை தவிர்த்து மாநகராட்சி ஏற்கெனவே அறிவித்துள்ள இடங்களில் கொட்டவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago