ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை : முதல்வருக்கு குமரி அனந்தன் பாராட்டு

By செய்திப்பிரிவு

ரேஷன் கடைகளில் பனைவெல் லம் விற்பனை செய்ய உத்தர விட்டதற்காக முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கற்பகம் என்ற பெயரில், ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருப்பது பாராட்டத்தக்கது.

பனைவெல்லத்தில் ரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின்,ரிபோபிளேவின் என்ற பி வைட்டமின்களும், நிகோடினிக் ஆசிட் என்ற பி3-ம், அஸ்கார்பிக் ஆசிட் என்ற சி வைட்டமினும் இருக்கின்றன. இவை மனித வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. ரேஷன் கடை மூலம் இவை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துவிடும்.

இதுபோல, வேம்பு, கற்றாழை மற்றும் மூலிகைகளால் ஆன சோப்பு தயாரிப்பதையும், `தமிழ் தறி' என்ற பெயரில், பராம்பரிய பட்டுச் சேலைகள் விற்பனைக்கு ஊக்கம் அளித்திருப்பதையும் பாராட்டுகிறேன். இதன்மூலம், தமிழர்களின் அடையாளம் காக்கப் படும். இவ்வாறு குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்