சென்னை துறைமுகத் தின் புதிய தலைவராக சுனில் பாலிவால் பொறுப்பேற்றுள்ளார்.
1993-ம் ஆண்டு தமிழக பிரிவைச் சேர்ந்தஐஏஎஸ் அதிகாரியான சுனில் பாலிவால், கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக தனது அரசுப் பணியைத் தொடங்கினார். பின்னர், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த இவர், தமிழ்நாடு சாலை வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது காமராஜர் துறைமுகத்தில் தலைவராக பதவி வகித்து வந்தார். சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago