மேலூர் அருகே வெளிநாடு வாழ் இளைஞர்கள் முயற்சியால் - கிராம தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் : காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

மேலூர் அருகே கிராமத் தெருக் களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்த இளைஞர்களை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.

மேலூர் அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்த மாவட்ட எஸ்பி பாஸ்கரன். மதுரை மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க, காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவின் பேரில் குடியிருப்பு வளாகம் மற்றும் பொது இடங்களில் மக்கள் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

மேலூர் அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இளை ஞர்களால் 20 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை காவல் கண் காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். கிராம இளைஞர்களின் முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்த எஸ்.பி. இதுபோல் மற்ற கிராமங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், டி.எஸ்.பி பிர பாகரன், காவல் ஆய்வாளர் சார் லஸ், சாத்தமங்கலம் ஊராட்சித் தலைவர் ரகு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்