மதுரையில் மருதுபாண்டியர் சிலைகளுக்கு கட்சியினர் மாலை :

By செய்திப்பிரிவு

மதுரையில் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அரசியல் கட்சி யினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் ஆங் கிலேய அரசால் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 1801-ம் ஆண்டு அக்.24-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். அதையொட்டி நேற்று தமிழக அரசு சார்பில் மருதுபாண்டியர் களின் நினைவு தினம் கடைப் பிடிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் தலைமையில் அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருமங்கலம் சிவரக்கோட்டை யில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைகளுக்கு அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டத் தலைவர் குருசாமி உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தெப்பக்குளம் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்