மத்திய ரயில்வே அமைச்சர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு சு.வெங்கேடசன் எம்.பி. அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ரயில்வே மருத்துவமனைகளில் நிர்வாக தகவல் அமைப்பு முறையை அமல்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகம், மருத்துவ ஊழியர்களுக்கு அக்.21 முதல் 29 வரை இணையவழியில் இந்தி மொழியில் பயிற்சி அளித்து வருகிறது.
இதனால் இந்தி பேசாத குறிப்பாக தமிழகத்திலுள்ள ரயில்வே மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த பயிற்சியை இந்தி மொழியில் மட்டும் நடத்தாமல், தமிழிலும் நடத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் அந்தந்த மொழிகளில் நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago