திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள செல்வபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா(35), அங்கன்வாடி பணியாளர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வரன்(30) என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்துவந்தது.
இதுதொடர்பாக, கடந்த 14.1.2018 அன்று இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜெயசுதாவின் பெரியப்பா மகன் அறிவானந்தம்(38), மகேஸ்வரனை கத்தியால் குத்த முயன்றபோது, அதைத் தடுக்க வந்த ராஜேஷ்கண்ணா(24) என்பவர் மீது கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராஜேஷ்கண்ணா, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அறிவானந்தம், ஜெயசுதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அறிவானந்தத்துக்கு ஆயுள் சிறை தண்டனையும், ஜெயசுதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago